இந்தியன் 2 வழக்கு; சென்னை உயர் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் மேல் முறையீடு

By ஆர்.பாலசரவணக்குமார்

இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குநர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்த நிலையில், உத்தரவை எதிர்த்து லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைக்கா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இந்தியன் 2 படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, லைக்கா சார்பில் தாக்கல் செய்யபட்ட மேல்முறையீட்டு மனுவானது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (ஆக. 06) விசாரணைக்கு வந்தது. அப்போது, லைக்கா தரப்பில், தனி நீதிபதியின் உத்தரவு நகல் இல்லாமல், மேல் முறையீட்டு வழக்கை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, லைக்கா நிறுவனத்தின் மேல் முறையீட்டு வழக்கை, தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல், விசாரணைக்குப் பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்