ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீனாவின் ஹி பிங் ஜியாவோவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இரு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை நிகழ்த்தியிருந்தார் சிந்து.
வெண்கலப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து பி.வி.சிந்துவுக்கு பாராட்டுகள் குவிந்தன. ஜனாதிபதி, பிரதமர் தொடங்கி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது பி.வி.சிந்துவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
» உன் மீது நீயே குற்றம் சுமத்த வேண்டாம்: யாஷிகாவுக்கு வனிதா விஜயகுமார் ஆறுதல்
» இளம்பெண்களின் கனவுகளுக்கு ஊக்கமாக இருப்பீர்கள்: இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு குஷ்பு புகழாரம்
"அன்புள்ள பி.வி.சிந்து.. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற உங்களுக்கு வாழ்த்துகள். நீங்கள் வரலாறு படைத்து, பெரிய கனவு காணும் ஏராளமான சிறு பெண்களுக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். உங்களை நினைத்து எப்போதும் பெருமை கொள்கிறேன்"
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
32 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago