'நவரசா' ஆந்தாலஜியில் இடம்பெற்றுள்ள ‘எதிரி’ படம் குறித்து இயக்குநர் பிஜோய் நம்பியார் பகிர்ந்துள்ளார்.
கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (ஆகஸ்ட் 6-ம் தேதி) வெளியாகவுள்ளது. 'நவரசா' ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.
இதில் கருணை உணர்வை அடிப்படையாகக் கொண்டு ‘எதிரி’ என்ற படத்தை பிஜோய் நம்பியார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், ரேவதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் பிஜோய் நம்பியார் கூறியதாவது:
» இதுவே ஒரு வெற்றிதான்! - இந்திய ஹாக்கி மகளிர் அணிக்கு ஷாரூக்கான் ஊக்கம்
» வாழ்வின் நிச்சயமற்ற தன்மையைச் சொல்லும் கதை: ‘இன்மை’ படம் குறித்து இயக்குநர் பகிர்வு
''பிரபல நடிகர் மகராந்த் தேஷ்பாண்டே ஒரு முறை என்னிடம் மிக முக்கியமான ஒன்றைக் கூறினார். நீங்கள் விரும்பும், குருவாக மதிக்கும், ஆளுமையுடன் பணிபுரியும்போது கவனமாக இருங்கள். நீங்கள் அவரைப் பார்த்து வளர்ந்திருப்பதால், அவர்களுடன் பணிபுரிவது சில சமயங்களில் அவர்களின் மகத்துவத்தை, அவர்கள் மீதான உங்களின் கற்பனை பிம்பத்தை அழித்துவிடும். ஆதலால் அம்மாதிரி வாய்ப்புகளைத் தவிர்ப்பது நல்லது என்றார்.
ஆனால், என் விசயத்தில் அது நடைபெறவில்லை. இளமையில் நான் பார்த்து பிரமித்த, மணி சார் உடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். அவருடன் பணிபுரிந்தபோது அவர் மீதான பிரமிப்பு அதிகரிக்கவே செய்தது. வாழ்நாளின் பொன் தருணங்கள் அவை.
இப்படத்தில் பல காட்சிகளுக்காக, நானும் விஜய் சேதுபதியும் ஒன்றாக அமர்ந்து விவாதித்து, உரையாடல்களை மீண்டும் எழுதினோம். நடிகர்கள் தங்கள் நடிப்பில் தங்களை எந்த அளவு ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என்பதைக் கண்டு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. விஜய் சேதுபதி அவரது காட்சிகள் மட்டுமின்றி மொத்தப் படத்தையும் மேம்படுத்தினார்.
உதாரணமாக நடிகை ரேவதியின் இறுதி வசனத்தை விஜய் சேதுபதிதான் எழுதினார். திரைக்கதையில் அவரது பங்களிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. டைட்டிலில் திரைக்கதையில் அவரது பெயரையும் இணைத்துள்ளேன். இப்படத்தை உருவாக்க, என்னுடன் உண்மையாக ஒத்துழைத்த, அர்ப்பணிப்புள்ள நடிகர்களைப் பெற்றது எனது அதிர்ஷ்டம்''.
இவ்வாறு பிஜோய் நம்பியார் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago