பிரபுதேவாவின் 'பொய்க்கால் குதிரை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

By செய்திப்பிரிவு

பிரபுதேவா நடித்து வரும் படத்துக்கு 'பொய்க்கால் குதிரை' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் பிரபுதேவா. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதனை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்தப் படத்துக்குப் பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடத்தி வந்தது படக்குழு. தற்போது இதற்கு 'பொய்க்கால் குதிரை' எனப் பெயரிட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்கள். இதனை ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்தப் படத்தில் பிரபுதேவா ஒரு கால் இல்லாதவராக நடித்திருப்பது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் உறுதியாகியுள்ளது. இதில் பிரபுதேவாவுக்கு நாயகிகளாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பல்லூ, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE