மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாயட்டு' திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
மார்டின் பிரகாட் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன், ஜோஜு ஜார்ஜ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'நாயட்டு'. ரஞ்சித், சசிதரன், மார்டின் பிரகாட் இணைந்து தயாரித்த இந்தப் படம் கடந்த ஏப்ரல் 8-ம் தேதி வெளியானது. காவல் துறைக்குள் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டது.
இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினார்கள். மேலும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இதர மொழிகளின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.
இறுதியாக இதன் தமிழ் ரீமேக் உறுதியாகியுள்ளது. இதனை கெளதம் மேனன் இயக்குவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவரும் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், 'நாயட்டு' ரீமேக்கில் யாரெல்லாம் நடிக்கவுள்ளார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
'நாயட்டு' தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து, தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக்கும் உறுதியாகியுள்ளது. இதன் தெலுங்கு ரீமேக் உரிமையை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago