சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் ஜி.பி.முத்து ஒப்பந்தமாகியுள்ளார்
டிக் டாக் செயலியில் பிரபலமாக இருந்தவர் ஜி.பி.முத்து. இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு யூ-டியூப் பக்கம் ஒன்றை தொடங்கினார். குறைந்த காலகட்டத்திலேயே இவரது பக்கத்தை மிக அதிகமானோர் பின் தொடர்ந்தனர். இதுவரை ஏறக்குறைய 9 லட்சத்துக்கு அதிகமானோர் ஜி.பி.முத்துவை பின் தொடர்கின்றனர். இவர் குறித்த மீம்ஸ்களும், வீடியோக்களும் தினமும் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம்.
இந்நிலையில் சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு படத்தில் ஜி.பி.முத்து ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் சதீஷ், ‘குக் வித் கோமாளி’ தர்ஷா குப்தா நடிக்கும் ஒரு திகில் காமெடி திரைப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடிக்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படத்தில் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இப்படத்தை யுவன் இயக்குகிறார். ஜாவித் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago