சுதந்திர போராட்ட வீரர்களுக்காக உருவாகும் பிரம்மாண்ட பாடல்- ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்

By செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் பெருமைகளை போற்றும்படியான ஒரு பாடல் உருவாகவுள்ளது.

இந்திய சுதந்திரதின 75வது ஆண்டு மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழர்களின் தியாகத்தை உணர்த்தும் விதமாகவும் இந்திய சுதந்திர போராட்டத் தியாகிகளின் பெருமைகளை போற்றும்படியான ஒரு பிரம்மாண்ட பாடல் உருவாகவுள்ளது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். அருண்ராஜா காமராஜ் எழுதும் இப்பாடலை ஏ.ராஜசேகர் இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, ஒரியா, மராட்டி, பெங்காலி, போஜ்புரி, பஞ்சாபி, குஜராத்தி, கொங்கனி உள்ளிட்ட 12 மொழிகளில் இந்த பாடல் உருவாகிறது. நாடு முழுவதும் உள்ள முன்னணி திரைப்படக் கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பாடல் உருவாக்கத்தில் பங்கு கொள்ளவிருக்கிறார்கள். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை வரலாற்று சிறப்பு மிக்க பல்வேறு இடங்களில் இப்பாடல் படமாக்கப்பட இருக்கிறது.

இப்பாடலுக்காக கனெக்டிங் இந்தியா வித் கலர்ஸ் என்ற தலைப்பில் உலக சாதனை முயற்சியாக 6 கி.மீ. நீளத்திற்கு கேன்வாஸ் பெயிண்டிங் வரையப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 75 முன்னணி ஓவியக்கலைஞர்கள் ஒவியம் தீட்டுகிறார்கள். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 5 அன்று வெளியாக இருக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காட்சி ஊடகங்களிலும் இப்பாடல் திரையிடப்பட இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE