தெலுங்கில் பொங்கல் வெளியீட்டுக்குக் குவியும் படங்கள்: விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி

By செய்திப்பிரிவு

பொங்கல் வெளியீட்டுக்கு பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் அறிவிக்கப்பட்டு இருப்பதால் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல முன்னணி நடிகர்களின் படங்கள் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரே கட்டமாக முழுவீச்சில் படப்பிடிப்பை நடத்தி வெளியிட்டு விடவேண்டும் என்ற முனைப்பில் பணிபுரிந்து வருகிறார்கள். சில படங்கள் இப்போதே வெளியீட்டுத் தேதியை முடிவு செய்து விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

அப்படி அறிவிக்கப்பட்ட சில படங்களால் தெலுங்கில் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. விநியோகஸ்தர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஏனென்றால் பவன் கல்யாண் - ராணா நடித்து வரும் 'அய்யப்பனும் கோஷியும்' தெலுங்கு ரீமேக், மகேஷ் பாபு நடித்து வரும் 'சர்காரு வாரிபட்டா', பிரபாஸ் நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்கள் இப்போதைக்கு வெளியிட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் படங்கள் தவிர்த்து வெங்கடேஷ் நடித்து வரும் 'எஃப் 3' படமும் இணையும் எனத் தெரிகிறது. இவ்வளவு படங்கள் ஒரே நாளில் வெளியானால், வசூல் முழுமையாகப் பிரிந்துவிடும் என்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

அதே வேளையில், ஒரே சமயத்தில் வெளியிட்டால் தங்களுடைய வசூலும் பாதிக்கப்படும் என்பதால், சில படங்கள் வெளியீட்டில் பின்வாங்கும் எனவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE