சஞ்சய் தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, 'கே.ஜி.எஃப் 2' படத்திலிருந்து அவருடைய தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
'கே.ஜி.எஃப்' படத்தைத் தொடர்ந்து 'கே.ஜி.எஃப் 2' தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஒரே சமயத்தில் அனைத்து மொழிகளிலும் 'கே.ஜி.எஃப் 2' வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் சஞ்சய் தத். இன்று (ஜூலை 29) அவருடைய பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு அவருடைய தோற்றத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 'கே.ஜி.எஃப்' ரசிகர்களின் மத்தியில் இந்த லுக் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் #Adheera என்ற சஞ்சய் தத் கதாபாத்திரத்தின் பெயர் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
'கே.ஜி.எஃப் 2' படத்தின் வெளியீட்டில் மாற்றம் இருப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் புதிய வெளியீட்டுத் தேதியை அறிவிக்கப் படக்குழு முடிவு செய்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
54 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago