எப்போதும் தனுஷிடமிருந்து ஊக்கம் பெறுகிறேன் என்று இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், நேற்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டுப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும், அவருடைய ரசிகர்களும் இணையத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
'ஆடை' படத்தின் இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பதிவில் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"என்னைச் சுற்றி இருப்பவர்கள் என்னுடைய டீன் ஏஜ் காலத்தில் பார்க்க தனுஷ் போல இருப்பதாகக் கூறினார்கள். அதுகுறித்து எப்போதும் என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்ததற்கு நன்றி. எப்போதும் அவரிடமிருந்து ஊக்கம் பெறுகிறேன். நாங்கள் சந்தித்தபோது கூட அவரிடம் இதைச் சொன்னேன். அதற்கு அவர் ஒரு புன்னகையையும், அத்துடன் 'இது கடவுளின் அருள்' என்றும் பதிலளித்தார்".
இவ்வாறு இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வைத்துப் படம் தயாரிக்கவுள்ளவர்கள் பலரும் பிரத்யேக போஸ்டர்களை வெளியிட்டனர். இன்று (ஜூலை 29) தனது ட்விட்டர் பதிவில் தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அனைவரும் நன்றி எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago