தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திக் நரேன் தெரிவித்துள்ள வாழ்த்து பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், இன்று (ஜூலை 28) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டுப் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ரசிகர்களும் பிரத்யேக போஸ்டர் வடிவமைப்புகளை வெளியிட்டுக் கொண்டாடி வருகிறார்கள்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். 'மாறன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ள வாழ்த்து இணையத்தில் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
» மீண்டும் தொடங்கப்பட்ட ஹரி - அருண் விஜய் படப்பிடிப்பு
» மலையாளத்தில் தொடரும் ஓடிடி வெளியீடுகள்: திரையரங்கு உரிமையாளர்கள் அதிர்ச்சி
தனது ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது:
"பிறந்த நாள் வாழ்த்துகள் தனுஷ் சார். படப்பிடிப்பில் தினமும் உங்களுடன் இருப்பது எனக்கு ஒரு புது கற்றல் அனுபவம். நான் ஒரு சிறந்த இயக்குநராக மாறினால் அதற்கு நான் உங்களுக்குக் கடமைப்பட்டுள்ளேன். வாழ்வில் எல்லா சிறந்த விஷயங்களும் உங்களுக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்".
இவ்வாறு கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago