‘ப்ளாக் விடோ’ குறித்த சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கோரிய நடிகர்

By செய்திப்பிரிவு

‘ப்ளாக் விடோ’ படத்தைக் குப்பை என்று கூறியதற்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகர் ஸ்டீபன் டார்ஃப் மன்னிப்பு கோரியுள்ளார்.

மார்வெல் நிறுவனத்தின் நான்காம் கட்டப் படங்களில் ஒன்றான ‘ப்ளாக் விடோ’ கடந்த ஜூலை 9 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது. இப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், டேவிட் ஹார்பர், ரேச்சல் வெய்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஓடிடியில் வெளியானது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘ட்ரூ டிடெக்டிவ்’ தொடரில் நடித்து பிரபலமான நடிகர் ஸ்டீபன் டார்ஃப் ‘ப்ளாக் விடோ’ படத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார். ‘குப்பைப் படம்’ என்றும் ஸ்கார்லெட்டை நினைத்துச் சங்கடப்படுவதாகவும் அவர் தெரிவித்தது மார்வெல் ரசிகர்களிடையே கடும் கொதிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் ஸ்டீபன் டார்ஃபுக்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.

இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தற்போது ஸ்டீபன் டார்ஃப் தான் பேசியதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

''எனக்கு ஸ்கார்லெட்டை மிகவும் பிடிக்கும். நான் அப்போது சொல்லவேண்டிய விஷயத்திலிருந்து வெளியே சென்றுவிட்டேன் என்று கருதுகிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகை. அவர் விரைவில் தாயாகப் போவதாகக் கேள்விப்பட்டேன். அவருக்கு என் வாழ்த்துகள். அவர் என்னுடைய பழைய தோழி. அவரைப் பற்றி நான் அப்படி பேசியதற்காக வருந்துகிறேன்.

நான் இன்னும் ‘ப்ளாக் விடோ’ பார்க்கவில்லை. நான் அதுபோன்ற படங்களைப் பார்ப்பதில்லை. எனக்கு 'அயன் மேன்' பிடிக்கும். அவர்கள் இன்னும் சற்று டார்க் ஆக எடுத்தால் எனக்குப் பிடிக்கும். எனக்கு ‘ஜோக்கர்’ பிடிக்கும். வரவிருக்கும் புதிய ‘பேட்மேன்’ படத்துக்காகக் காத்திருக்கிறேன். நான் பேசியது குறித்து ஸ்கார்லெட்டுக்கு குறுந்தகவல் அனுப்பினேன். ஆனால், அவரிடமிருந்து பதில் வரவில்லை''.

இவ்வாறு ஸ்டீபன் டார்ஃப் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

33 mins ago

சினிமா

54 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்