'விக்ரம்' அப்டேட்: கமலுக்கு மகனாக காளிதாஸ் ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'விக்ரம்' படத்தில் கமலுக்கு மகனாக நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஜூலை 16-ம் தேதி தொடங்கப்பட்டது. இதில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் கமலுடன் நடிக்கவுள்ளனர். தற்போது கமல் - ஃபகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

'விக்ரம்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக க்ரிஷ் கங்காதரனும், இசையமைப்பாளராக அனிருத்தும் பணிபுரிந்து வருகிறார்கள். இதனை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.

தற்போது 'விக்ரம்' படத்தில் கமலுக்கு மகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கமல் மீது பெரிய மரியாதைக் கொண்டவர் நடிகர் ஜெயராம். பல்வேறு பேட்டிகளில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

'ஒரு பக்க கதை' படத்தின் அறிமுக விழாவில், காளிதாஸ் ஜெயராமின் கையைப் பிடித்து மேடைக்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி வைத்தவர் கமல் என்பது நினைவு கூரத்தக்கது. தற்போது கமலுக்கு மகனாக நடிக்க காளிதாஸ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்