'மாலிக்' படத்தைப் பாராட்டிய கமல்

By செய்திப்பிரிவு

'மாலிக்' படத்தைப் பார்த்துவிட்டு ஃபகத் பாசிலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் கமல்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கமல் மற்றும் ஃபகத் பாசில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே, ஃபகத் பாசில் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'மாலிக்' படத்தைப் பார்த்துள்ளார் கமல். அதனைத் தொடர்ந்து படத்தின் இயக்குநர் மகேஷ் நாராயணன் மற்றும் ஃபகத் பாசில் இருவருக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழில் கமல் நடிப்பில் வெளியான 'நாயகன்' படத்தின் தாக்கமே 'மாலிக்' என்று இயக்குநர் மகேஷ் நாராயணன் மற்றும் ஃபகத் பாசில் இருவரும் அளித்த பேட்டிகளில் குறிப்பிட்டு இருந்தது நினைக் கூரத்தக்கது. தற்போது 'மாலிக்' படத்தைப் பார்த்துவிட்டு கமல் பாராட்டியுள்ளார்.

முன்னதாக கமல் நடிப்பில் வெளியான 'விஸ்வரூபம்' படத்தின் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டவர் மகேஷ் நாராயணன் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE