வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய படமொன்றில் ஆண்ட்ரியா நடித்து வருவது உறுதியாகியுள்ளது.
விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், படங்கள் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் வெற்றிமாறன்.
லாரன்ஸ் நடிக்கவுள்ள 'அதிகாரம்' படத்தை ஃபைவ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளார். அதற்கு முன்னதாக, வெற்றிமாறன் தயாரித்து வரும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். இதில் ஆண்ட்ரியா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முழுப் படப்பிடிப்பையும் சென்னைக்குள்ளேயே முடித்துவிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
» ஆபாசப் பட செயலி வழக்கு: ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு 3 நாள் போலீஸ் காவல்
வெற்றிமாறன் இயக்கத்தில் ஆண்ட்ரியா ‘வட சென்னை’ படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ’ஆடுகளம்’ படத்தில் நாயகி டாப்ஸிக்கு பின்னணிக் குரல் கொடுத்திருந்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
47 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago