'ஆர்சி 15' அப்டேட்: இன்னொரு நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தம்?

By செய்திப்பிரிவு

ஷங்கர் - ராம்சரண் இணையும் படத்தின் இன்னொரு நாயகியாக ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் பணிகள் ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தில் ராஜு தயாரித்து வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக தமன் பணிபுரிந்து வருகிறார். விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இதில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளார் ராம்சரண். ஒரு நாயகியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இன்னொரு நாயகிக்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. தற்போது அந்தக் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'ஆர்சி15' என அழைத்து வருகிறது படக்குழு. படத்தின் பூஜையன்று ராம்சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

மேலும்