இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் மறைவு: திரையுலகினர் இரங்கல்

By செய்திப்பிரிவு

சூர்யா நடித்த ‘ஸ்ரீ’ படத்தின் இசையமைப்பாளர் டி.எஸ்.முரளிதரன் காலமானார்.

2002ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ஸ்ரீ’. இப்படத்தை புஷ்பவாசகம் இயக்கியிருந்தார். இப்படத்துக்கு இசையமைத்தவர் டி.எஸ்.முரளிதரன். இப்படத்தில் இடம்பெற்ற ‘வசந்தசேனா’ என்ற பாடல் மிகவும் பிரபலம்.

கோத்தம் என்கிற இந்திப் படம் உட்பட பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், மனோஜ் பாரதிராஜா தயாரிப்பில் விக்ரம் - மீனா பாடிய ஒரு தனி ஆல்பத்துக்கும் இசையமைத்துள்ளார்.

இரண்டே பேர் நடித்த "வித்தையடி நானுனக்கு" என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ள டி.எஸ்.முரளிதரன், ராமநாதன் கே.பி என்ற பெயரில் பல படங்களில் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் டி.எஸ்.முரளிதரன் நேற்று (18.7.21) காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்