ஷங்கர் படத்துக்கு நடனம் அமைக்க வாய்ப்பு கிடைத்திருப்பதால், ஜானி மாஸ்டர் நெகிழ்ச்சியில் உள்ளார்.
ராம்சரண் நடிக்கவுள்ள படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குநர் ஷங்கர். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரித்து வருகிறார். இதில் நாயகியாக கியாரா அத்வானி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
முழுக்க அரசியல் பின்னணியில் இந்தப் படம் உருவாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். தற்போது ராம்சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு, படப்பிடிப்புக்கான இடங்கள் தேர்வு, திரைக்கதையை இறுதி செய்வது எனப் பணிபுரிந்து வருகிறார் ஷங்கர்.
ராம்சரண் படத்தின் பாடல்களுக்கு நடன இயக்குநராக ஜானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பாடல்களுக்கு நடனம் அமைத்ததின் மூலம் முன்னணி நடன இயக்குநராக வலம் வருகிறார்.
» விஜய்யை வாழ்நாளில் மறக்க மாட்டோம்: கமீலா நாசர்
» முழுவீச்சில் 'விக்ரம்' படப்பிடிப்பு: விஜய் சேதுபதி, ஃபகத் பாசிலுக்கு கமல் அழைப்பு
ஷங்கர் - ராம்சரண் படத்தில் பணிபுரியவிருப்பது குறித்து நடன இயக்குநர் ஜானி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
" 'முக்காபுலா' பாடலுக்கு மேடை நடனமாடிக் கொண்டிருந்தவர், 'பாய்ஸ்' படத்தில் 500 பேரில் ஒருவராக ஆடியவனாக, நான் எப்போதுமே ஷங்கர் சாரை ரசித்திருக்கிறேன். இப்போது, அவருடைய படத்திற்கு முக்கிய நடன இயக்குநராக இணைகிறேன்.
ராம்சரண் சார் படத்தில் வேலை செய்வதை என்னாலேயே நம்ப முடியவில்லை. என் மீதான நம்பிக்கைக்கு நன்றி சார். நான் எப்போதுமே ராம்சரண் சாருக்கு நன்றியுடன் இருப்பேன். தில் ராஜூ சார் எனக்குத் தொடர்ந்து அளித்த வாய்ப்புகளுக்காக நன்றி."
இவ்வாறு ஜானி தெரிவித்துள்ளார்.
'இந்தியன் 2', 'ராம்சரண் படம்' ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியில் ரன்வீர் சிங் நடிக்கவுள்ள படத்தையும் இயக்கவுள்ளார் ஷங்கர். இது தமிழில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'அந்நியன்' படத்தின் ரீமேக் ஆகும்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago