அசோக் செல்வன் நடிக்கும் சில நேரங்களில் சில மனிதர்கள்

By செய்திப்பிரிவு

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகும் படத்துக்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

'ஓ மை கடவுளே' படத்தின் வெற்றிக்குப் பிறகு பல்வேறு இயக்குநர்கள், அசோக் செல்வனிடம் கதைகள் கூறி வந்தனர். இதில் சில கதைகளைத் தேர்வு செய்து நடிக்கவுள்ளார். முதலில் 'ஹாஸ்டல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது அசோக் செல்வன் நடிக்கவுள்ள அடுத்த படம் முடிவாகியுள்ளது. இதனை கமல் அறிமுகப்படுத்தி வைத்தார். 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தை ஏ.ஆர் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில் அபி ஹாசன், மணிகண்டன், ப்ரவீன் ராஜா, ரியா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், அனுபமா குமார், பானுப்ரியா, இளவரசு உள்ளிட்டோர் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரன், இசையமைப்பாளராக ராதன் மற்றும் எடிட்டராக பிரசன்னா ஜி.கே உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்