டிஸ்னி மார்வலின் சூப்பர்ஹீரோ திரைப்படமான ப்ளாக் விடோ இந்தியாவில் திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
மார்வல் சினிமா பிரபஞ்சத்தில் ப்ளாக் விடோ கதாபாத்திரம் அயர்ன் மேன் 2 திரைப்படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குப் பின் அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா படங்களிலும் இந்த கதாபாத்திரத்துக்கு முக்கியப் பங்கு இருந்தது. அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தில் இந்தக் கதாபாத்திரம் உயிர் தியாகம் செய்வது போல கதை அமைக்கப்பட்டிருந்தது.
அதே நேரம் இந்தக் கதாபாத்திரத்துக்கான தனித் திரைப்படத்தை தயாரிக்கப் பல ஆண்டுகளாக முயற்சி நடந்து வந்தது. ஒரு வழியாக 2017ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பமாகி 2019 ஆண்டு படப்பிடிப்பு முடிந்தது. கடந்த ஆண்டே இந்தப் படம் வெளியாகவிருந்தது. ஆனால் கரோனா நெருக்கடி காரணமாக பல முறை படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
கடந்த வாரம் அமெரிக்கா உள்ளிட்ட திரையரங்குகள் திறக்கப்பட்டிருக்கும் நாடுகளில் மட்டும் ப்ளாக் விடோ வெளியானது. மேலும் டிஸ்னி + ஓடிடி தளத்திலும் அதே நாளில் வெளியானது. திரையரங்கிலும், ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியான முதல் மார்வல் சூப்பர் ஹீரோ திரைப்படம் இதுதான்.
முதல் மூன்று நாட்களில் அமெரிக்கத் திரையரங்குகள் மூலமாக மட்டும் 80 மில்லியன் டாலர்களையும், மற்ற நாடுகளில் 78 மில்லியன் டாலர்களையும் மொத்தமாக 158 மில்லியன் டாலர்களையும் வசூலித்து அசத்தியது. இது கடந்த ஒரு வருட தொற்றுக் காலத்தில் வெளியான படங்களில் அதிக வசூலாகும். ஓடிடியிலும் இந்தப் படத்துக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் அக்டோபர் மாதம் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது திரையரங்குகளில் வெளியாமல் நேரடியாக டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ப்ளாக் விடோ வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் மூன்றாவது அலை வரும் என்று வல்லுநர்கள் எச்சரித்திருப்பதாலேயே தயாரிப்பு தரப்பு இந்த முடிவை எடுத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் ப்ளாக் விடோ வெளியாவது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமல்லாது மலேசியா, தாய்லாந்து, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ப்ளாக் விடோ திரையரங்குகளைத் தவிர்த்து நேரடி ஓடிடி வெளியீடாக வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago