பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகும் 'ப்ரோ டாடி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து பணிபுரிந்து வரும் படம் 'ப்ரோ டாடி'.
பிருத்விராஜ் இயக்கத்தில் உருவாகும் 2-வது படமாக இது அமைந்துள்ளது. இதில் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்கவுள்ளனர். குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு இன்று (ஜூலை 15) முதல் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதலில் கேரளாவில்தான் படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இன்னும் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்படவில்லை. ஆகையால், ஹைதராபாத்தில் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளனர்.
'ப்ரோ டாடி' படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதை பிருத்விராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago