நடிகை டாப்ஸி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் டாப்ஸி. தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். 'ராஷ்மி ராக்கெட்', 'லூப் லபேடா', 'டூபாரா', 'சபாஷ் மிது' உள்ளிட்ட இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது புதிதாகப் படத் தயாரிப்பில் இறங்கியிருக்கிறார் டாப்ஸி. தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு 'அவுட்சைடர்ஸ் பிலிம்ஸ்' எனப் பெயரிட்டுள்ளார். தான் நடிக்கும் த்ரில்லர் படமொன்றை முதல் தயாரிப்பாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளார் டாப்ஸி.
தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருப்பது தொடர்பாக டாப்ஸி கூறியிருப்பதாவது:
"கடந்த ஆண்டோடு இந்தியத் திரைத்துறையில் நான் குதித்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்தபோது, இதில் நான் மிதப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இதில் நீந்தவும் கற்றுக் கொள்வேன் என்று எனக்குத் தெரியாது. ஒரு பிரபலமான நபராக வேண்டும் என்ற கனவு இல்லாமல் இருந்த என்னைப் போன்ற ஒருவர் மீது அதீத அன்பையும் நம்பிக்கையையும் வைத்த அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.
இது அவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய நேரம். ஏனெனில் மிகப்பெரிய சக்தி கிடைக்கும். கூடவே மிகப்பெரிய பொறுப்பும் சேர்ந்து கொள்கிறது. எனவே, என்னை வாழ்த்துங்கள், காரணம் வெளியிலிருந்து பார்ப்பதற்குத் தோற்றம்தான் முக்கியம். என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன், ‘அவுட்சைடர் பிலிம்ஸ்’ மூலம் ஒரு தயாரிப்பாளராக."
இவ்வாறு டாப்ஸி தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago