பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. கரோனா அச்சுறுத்தல் குறைவதற்காகக் காத்திருந்தது படக்குழு.
தற்போது காரைக்குடியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பூசி போட்டிருப்பவர்களுக்கு மட்டுமே படப்பிடிப்பில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை 'சூர்யா 40' என்று அழைத்து வருகிறது படக்குழு.
'சூர்யா 40' படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உறுதிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரத்னவேலு கூறியிருப்பதாவது:
» 'அண்ணாத்த' படப்பிடிப்பில் மாற்றம்
» 'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்: முக்கியமான கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே
"மீண்டும் படப்பிடிப்புத் தளத்துக்குத் திரும்புகிறேன். நீண்ட இடைவேளைக்குப் பிறகு கேமராவைக் கையில் பிடிப்பது மிகச் சிறந்த உணர்வு. இது தான் என்னுடைய இடம். சினிமா. நீண்ட நாட்கள் நடக்கவிருக்கும் இந்தக் கட்ட படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளோம்"
இவ்வாறு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தெரிவித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago