ஒரே ஒரு காட்சியில் 98 விநாடிகள் நடித்த நடிகர் டான் சீடில், தான் எம்மி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்குவோரை கவுரவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் சிறந்த தொலைக்காட்சித் தொடர்கள், அதில் இடம்பெற்ற கலைஞர்கள் ஆகியோருக்கு எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அகடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், நேஷனல் அகடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், இண்டர்நேஷனல் அகடமி ஆஃப் டெலிவிஷன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து இந்த விருதுகளை அளித்துவருகின்றன.
2021 எம்மி விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியானது. இதில் தி க்ரவுன் மற்றும் தி மண்டலோரியன் நிகழ்ச்சிகள் அதிகபட்ச பரிந்துரைகளைப் பெற்றுள்ளன. இதில் மிகச்சிறந்த கவுரவத் தோற்றம் என்ற பிரிவில் நடிகர் டான் சீடில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
» அஜித் தோற்றத்துக்குப் பாராட்டு: சர்ச்சையில் சிக்கிய சாந்தனு
» லடாக் படப்பிடிப்புத் தளத்தில் அசுத்தம் செய்யவில்லை: 'லால் சிங் சட்டா' தயாரிப்பாளர்கள் விளக்கம்
டிஸ்னி + தளத்தில் ஃபால்கன் அண்ட் தி விண்டர் சோல்ஜர் வெப் சீரிஸில் தோன்றியதற்காக அவருக்கு இந்தப் பரிந்துரை கிடைத்துள்ளது. ஆனால் அந்தத் தொடரில் வெறும் 98 விநாடிகள் மட்டுமே சீடில் நடித்திருந்தார். அந்தக் காட்சியும் அவரது நடிப்புக்குச் சவாலான காட்சி என்றெல்லாம் இல்லாமல், சாதாரணமாகப் பிரதான கதாபாத்திரம் ஒருவருடன் உரையாடும் காட்சியாகவே அமைக்கப்பட்டிருந்தது.
எனவே, அவருக்கே ஏன் இந்த விருதுப் பரிந்துரை என்று பலரும் ஆச்சரியத்துடன் கேள்வியெழுப்பியுள்ளனர். குறிப்பாக டான் சீடிலே தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
"நல விரும்பிகளுக்கு நன்றி, வெறுப்பாளர்களே மன்னித்து விடுங்கள். எனக்கும் கூடத்தான் இது எப்படி என்று புரியவில்லை. எப்படியோ கிடைத்துவிட்டது. வாழ்க்கை ஓடுகிறது" என்று நகைச்சுவையுடன் ட்வீட் செய்துள்ளார்.
இதற்கு முன் 1999ஆம் ஆண்டு, 'ஷேக்ஸ்பியர் இன் லவ்' திரைப்படத்தில், 8 நிமிடம் மட்டுமே நடித்திருந்த நடிகை ஜூடி டென்ச் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதோடு அந்தப் பிரிவில் விருதையும் வென்றார். டான் சீடிலின் பரிந்துரையும் அதுபோல இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் ஒப்பிட்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
19 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago