ஓடிடி தளத்தில் 'நாராப்பா' படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
இதன் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்ஷன்ஸ், தாணு இருவரும் இணைந்து தயாரிக்க, வெங்கடேஷ் நாயகனாக நடித்து வந்தார். ப்ரியாமணி நாயகியாக நடித்துள்ளார். 'நாராப்பா' எனப் பெயரிடப்பட்டுள்ள இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, வெளியீட்டுக்குத் தயாரானது.
கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மக்கள் எந்த அளவுக்குத் திரையரங்கிற்கு வருவார்கள் என்பது தெரியாமல் உள்ளது. இதனால், பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
» ஆண் குழந்தைக்கு அப்பாவான சிவகார்த்திகேயன்: தன் தந்தையே மகனாகப் பிறந்ததாக நெகிழ்ச்சி
» சுனில் ஷெட்டி வீடு இருக்கும் கட்டிடத்தை சீல் வைத்த மும்பை மாநகராட்சி
இதனால் 'நாராப்பா' படத்தை ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் அமேசான் ப்ரைம் நிறுவனம் 'நாராப்பா' படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியது. ஜூலை 20-ம் தேதி 'நாராப்பா' வெளியாகும் என்று அமேசான் ப்ரைம் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'நாராப்பா' மட்டுமன்றி சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'த்ரிஷ்யம் 2' படமும் ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago