பிரபல தெலுங்கு நடிகர் கத்தி மகேஷ் மறைவு

By செய்திப்பிரிவு

பிரபல தெலுங்கு நடிகரும், திரைப்பட விமர்சகருமான கத்தி மகேஷ் உயிரிழந்தார். அவருக்கு வயது 44.

தெலுங்கில் நடிகராகவும், சினிமா விமர்சகராகவும் வலம் வந்தவர் கத்தி மகேஷ். 2017ஆம் ஆண்டு ஸ்டார் மா தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார். இவரது சினிமா விமர்சனங்களால் இணையத்தில் சர்ச்சைகள் கிளம்புவதுண்டு. அத்துடன் சமூக வலைதளங்களில் கத்தி மகேஷுக்கும் பிரபல தெலுங்கு நடிகர்களின் ரசிகர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்படுவதுண்டு. 2018ஆம் ஆண்டு இவரது சர்ச்சை கருத்துக்களால் இவர் ஹைதராபாத் நகருக்குள் நுழைய போலீஸார் ஆறு மாதங்களுக்கு தடை விதித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 25ஆம் தேதி அன்று நெல்லூர் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த ஒரு லாரியோடு அவரின் கார் நேருக்கு நேர் மோதியது. இதில் மகேஷுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிப்பட்டு வந்தது. அவரது மருத்துவ செலவுக்காக ஆந்திர அரசு ரூ.17 லட்சம் வழங்கியது.

இந்நிலையில் நேற்று (ஜூலை 11) மாலை 4 மணியளவில் கத்தி மகேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

மேலும்