ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் இரண்டாம் பாகம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏலியன் அலியன்' என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25'. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூரஜ் வெஞ்சரமூடு, சோபின் ஸாஹிர் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்தனர். ரசிகர்களிடம், விமர்சகர்களிடமும் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. சிறந்த நடிகர், சிறந்த அறிமுக இயக்குநர், சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட கேரள மாநில அரசின் விருதுகளை இந்தப் படம் வென்றது.

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஏலியன் அலியன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ரதீஷ் பாலகிருஷ்ணனே எழுதி இயக்கவுள்ளார். போஸ்டரை வெளியிட்டுப் படத்தைப் பற்றி தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது. முந்தைய பாகத்தைப் போலவே இதுவும் நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சிறிய மலையின் மீது எந்திர ஏலியன் ஒன்று உட்கார்ந்திருப்பதைப் போல இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்' திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு ரீமேக் தயாரிப்பில் உள்ளன. தமிழில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரிக்கிறார். தர்ஷன் நாயகனாக நடிக்கிறார்.

இன்னொரு பக்கம் நிவின் பாலி நாயகனாக நடிக்க கனகம், காமினி, கலஹம் என்கிற படத்தை இயக்குநர் ரதீஷ் இயக்கியுள்ளார். மேலும், குஞ்சக்கோ போபன் நாயகனாக நடிக்கும் ஒரு நகைச்சுவைப் படத்தையும் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்