ஓடிடியில் 'நவரசா' ஆந்தாலாஜி வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.
கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜியில் அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்துள்ளனர். மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
'நவரசா' ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இதில் கெளதம் மேனன், பிஜோய் நம்பியார், ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், அரவிந்த்சுவாமி, கார்த்திக் சுப்புராஜ், சர்ஜுன், ரதீந்திரன் பிரசாத், வஸந்த் சாய் ஆகியோர் இயக்குநர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.
இந்த ஆந்தாலஜியில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், அதர்வா, அஞ்சலி, டெல்லி கணேஷ், அதிதி பாலன், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன.
» ஓடிடிதான் எதிர்காலம்: இயக்குநர் மணிரத்னம் கருத்து
» எங்கள் குரு - சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு: கே.பி. குறித்து கமல் பகிர்வு
தற்போது இதன் டீஸர் இன்று (ஜூலை 9) காலை வெளியிடப்பட்டது. இதில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி 'நவரசா' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த ஆந்தாலாஜியின் மூலம் கிடைத்த பணியில் சுமார் 12,000 தொழிலாளர்கள் பயனடைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இந்த கரோனா ஊரடங்கு சமயத்தில் மாதந்தோறும் 1500 ரூபாய் கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago