இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’- ரிலீஸ் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

ஹாலிவுட்டின் பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ பட வரிசையில் இறுதியாக வெளியாகியுள்ள படம் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’. 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவேண்டிய இப்படம் கரோனா அச்சுறுத்தலால் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் இந்த ஆண்டு மே மாதம் தென்கொரியாவில் முதலில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் ஜூன் 25 அன்று வெளியானது.

கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் உலக அளவில் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. வட அமெரிக்காவில் வெளியான முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படமாகவும் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ மாறியுள்ளது.

இந்நிலையில் ‘எஃப் 9: தி ஃபாஸ்ட் சாகா’ திரைப்படம் இந்தியத் திரையரங்குகளில் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியாகும் என்று யுனிவர்ஸல் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE