சிம்பு நடிக்கவுள்ள 'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.
'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்களைத் தொடர்ந்து கெளதம் மேனன் - சிம்பு இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரியவுள்ளனர். வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வருகிறார்.
'நதிகளிலே நீராடும் சூரியன்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது சென்னையில் இதன் படப்பிடிப்பைத் தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
முதற்கட்டப் படப்பிடிப்பு 10 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது சிம்புவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
» அஸ்வினுக்கு நாயகியாக தேஜ் அஸ்வினி ஒப்பந்தம்
» 'நவரசா' ஆந்தாலாஜியில் படங்களின் பெயர்; யாருடைய இயக்கத்தில் யார்? - முழுமையான விவரம்
'நதிகளிலே நீராடும் சூரியன்' படத்துக்கு இடையே 'பத்து தல' படத்திலும் கவனம் செலுத்த சிம்பு திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
53 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago