'நவரசா' ஆந்தாலாஜியில் படங்களின் பெயர், யாருடைய இயக்கத்தில் யார் நடித்துள்ளார்கள் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
கரோனா முதல் அலையின்போது ஏற்பட்ட பொருளாதார இழப்புக்கு உதவுவதற்காக 'நவரசா' ஆந்தாலஜி தயாராகி உள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜியில் அனைவருமே சம்பளமின்றிப் பணிபுரிந்துள்ளனர். மணிரத்னம் மற்றும் ஜெயந்திரா இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
'நவரசா' ஆந்தாலஜியில் உள்ள நவரசங்களை வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். இதில் எந்த இயக்குநர் இயக்கத்தில் யாரெல்லாம் நடித்துள்ளனர், என்ன பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகியுள்ளது.
* 'கருணை' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். 'எதிரி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
» ஜூலை 15-ல் 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக்?
» 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன்? - வனிதா விஜயகுமார் விளக்கம்
* 'காமெடி' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். 'சம்மர் ஆப் 92' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* 'ஆச்சரியம்' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். 'ப்ராஜெக்ட் அக்னி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அரவிந்த்சுவாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* 'கோபம்' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை அரவிந்த்சுவாமி இயக்கியுள்ளார். 'ரெளத்திரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* 'அமைதி' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். 'பீஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* 'தைரியம்' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை சர்ஜுன் இயக்கியுள்ளார். 'துணிந்த பின்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* 'பயம்' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். 'இன்மை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* 'அருவருப்பு' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை வஸந்த் சாய் இயக்கியுள்ளார். 'பாயசம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
* 'காதல்' மையப்படுத்தி உருவாகியுள்ள படத்தை கெளதம் மேனன் இயக்கியுள்ளார். 'கிட்டார் கம்பி மேலே நின்று' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago