அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 15-ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்தது.
தற்போது அந்தக் காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகளும் முடிந்துவிட்டன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் இதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ஹைதராபாத்தில் 2 நாட்கள் மட்டும் சின்ன சின்ன காட்சிகளை படமாக்கவுள்ளார்கள். இதில் அஜித் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும், பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளது படக்குழு. ஜூலை 15-ம் தேதி வெளியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
» 'பிக் பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது ஏன்? - வனிதா விஜயகுமார் விளக்கம்
» என் ஆதர்ச நாயகனின் ஆதர்ச நாயகன்: திலீப் குமார் மறைவுக்கு அபிஷேக் பச்சன் இரங்கல்
விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
'வலிமை' படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு 'வலிமை' படம் வெளியானவுடன் தான் இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago