நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்: வரவேற்கத் தயாராகும் ரசிகர்கள்

By செய்திப்பிரிவு

சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்புகிறார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமடைந்தையடுத்து, 2016ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளினிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் அமெரிக்காவில் அதே மருத்துவமனையில் ரஜினி மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. அதன்பிறகு அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்று குறைந்ததால் மத்திய அரசிடமிருந்து சிறப்பு அனுமதி பெற்று கடந்த ஜூன் 19ஆம் தேதி அன்று ரஜினி அமெரிக்கா சென்றார். அவருடன் மனைவி லதா ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை (ஜூலை 8) அதிகாலை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பவுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதால், அப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை ரஜினி சென்னை திரும்பியவுடன் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்