'பாபநாசம் 2'வில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு மீனா பதிலளித்துள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் கமல் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் ரீமேக்கான இந்தப் படத்தில் கெளதமி நாயகியாக நடித்திருந்தார். ஜீத்து ஜோசப் இயக்கியிருந்தார்.
தற்போது 'த்ரிஷ்யம் 2' வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தப் படமும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுவிட்டது. இந்தி ரீமேக் உறுதியாகிவிட்டது. தமிழில் எப்போது ரீமேக்காகும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால், இப்போதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ தகவலுமே இல்லை.
இந்நிலையில், தமிழில் ரீமேக் செய்யப்பட்டாலும் கமலுக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்பதுதான் அனைவருடைய கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் கமல் - கெளதமி இருவருமே பிரிந்துவிட்டார்கள். இதனால் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நாயகியாக நடித்த மீனாவே நடிக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார் மீனா. அப்போது ரசிகர் ஒருவர் "'பாபநாசம் 2'வில் நடிக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு,"அதனை கமல் சாரிடம் கேளுங்கள்" என்று பதிலளித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago