ஜெயம் ரவிக்கு நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தாமதமாவதால், தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார் ஜெயம் ரவி. இந்தப் படத்தை 'பூலோகம்' இயக்குநர் கல்யாண் இயக்கவுள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
ஜூலையில் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் தற்போது தான் குறைந்து வருவதால் ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளனர். இதில் நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு.
தற்போது, இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியுள்ளார். ஜெயம் ரவி - ப்ரியா பவானி சங்கர் இணையும் முதல் படமாக இது அமைந்துள்ளது. சென்னையிலேயே பெரும்பாலான காட்சிகளை படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.
» பழம்பெரும் நடிகர் திலீப் குமார் மறைவு - பிரபலங்கள் இரங்கல்
» இயக்குநர், நடிகர் சிங்கம்புலி பிறந்தநாள் ஸ்பெஷல்: திரைமறைவிலும் திரையில் தோன்றியும் அசத்திய கலைஞன்
தற்போது ஜெயம் ரவியுடன் நடிக்கும் இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago