நடிகை ராதிகா சரத்குமாரின் ராடான் மீடியா வொர்க்ஸ் தயாரிப்பில், சரத்குமார் நடிப்பில், 'இரை' என்கிற வெப் சீரிஸ் உருவாகிறது. இதை 'தூங்காவனம்', 'கடாரம் கொண்டான்' திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா இயக்குகிறார்.
திங்கட்கிழமை அன்று இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ரசிகர்களைக் கட்டிப்போடும், பரபரப்பான திருப்பங்கள் நிறந்த க்ரைம் த்ரில்லராக இந்தத் தொடர் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வெப் சீரிஸ் குறித்துப் பேசியிருக்கும் ராதிகா, "எங்கள் நிறுவனம், குடும்ப ரசிகர்களின் ரசனையை முதன்மையாகக் கொண்டு இயங்கும் நிறுவனம்.
ஓடிடி தளத்தில் எங்களது அறிமுகத் தயாரிப்பான ’இரை’ இணையத் தொடர், எப்போதும் போல் குடும்ப ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும்படியான அனைத்து அம்சங்களும் பொருந்திய அற்புதமான கதையாகும். இந்த இணையத் தொடர் க்ரைம் த்ரில்லர் வகையில் உருவானாலும் குடும்ப சென்டிமென்ட் அம்சங்களும் நிறைந்ததாக இருக்கும்.
» தொடர் சிகிச்சையில் நடிகர் திலீப் குமார் தேறி வருகிறார்: சாய்ரா பானு
» 5 வருடங்களுக்குப் பிறகு கரண் ஜோஹர் இயக்கம்: புதிய படம் அறிவிப்பு
சரத்குமார் டிஜிட்டல் தளத்தில் எங்கள் நிறுவனம் மூலம் அறிமுகமாவது மிகவும் மகிழ்ச்சி. த்ரில்லர் வகைப் படங்களில் தன் திறமையைப் பெரிய அளவில் நிரூபித்துக் காட்டிய, இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா இந்த இணையத் தொடரையும் மிக அற்புதமான படைப்பாக மாற்றுவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெப் சீரிஸுக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். யுவராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக் காட்சிகளின் இயக்குநராக சில்வா மாஸ்டர் பணியாற்றவுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago