'வெள்ளை யானை' ஒளிபரப்புத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'வெள்ளை யானை' படத்தின் ஒளிபரப்புத் தேதியை அறிவித்துள்ளது சன் டிவி நிறுவனம்.

'சீடன்' படத்துக்குப் பிறகு மீண்டும் சுப்பிரமணிய சிவா இயக்கத்துக்குத் திரும்பிய படம் 'வெள்ளை யானை'. மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருந்தது.

ஆனால், கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் வெளியாகாமலே இருந்தது. ஆகையால், நேரடி டிஜிட்டல் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக 'வெள்ளை யானை' படத்தை நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமையைக் கைப்பற்றியது சன் டிவி. எப்போது ஒளிபரப்பாகும் என்பதை அறிவிக்காமலேயே இருந்தது.

தற்போது 'வெள்ளை யானை' படத்தின் விளம்பரத்துடன், ஜூலை 11-ம் தேதி மதியம் 3 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்று அறிவித்துள்ளது. இந்த விளம்பரம் இன்று (ஜூலை 4) முதல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முன்னதாக, இதே பாணியில் 'ஏலே' மற்றும் 'மண்டேலா' ஆகிய படங்கள் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்