'சீயான் 60' படக்குழுவினருக்கு கடும் கட்டுப்பாடுகள்

By செய்திப்பிரிவு

'சீயான் 60' படக்க்குழுவினர் அனைவருமே முதல் தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா', 'சீயான் 60' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன. இந்த இரண்டு படங்களுக்குமே லலித் குமார் தான் தயாரிப்பாளர் என்பதால், முதலில் 'சீயான் 60' படத்தை முடித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டு இருந்த 'சீயான் 60' படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்காக படக்குழுவினர் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அனைவருமே முதல் தவணை தடுப்பூசியாவது போட்டிருக்க வேண்டும் எனப் படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. கரோனா தடுப்பூசி போடாத யாருமே படப்பிடிப்புக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் ஒருசில நாட்களில் படப்பிடிப்பைத் தொடங்கி, இந்த மாதத்திற்கு ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுவரை சுமார் 60% படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். ஜூலையில் படப்பிடிப்பை முடித்து அக்டோபரில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சீயான் 60' படத்தில் விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்