அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் என்ன சொல்ல போகிறாய்

By செய்திப்பிரிவு

அஸ்வின் நாயகனாக அறிமுகமாகும் படத்துக்கு 'என்ன சொல்ல போகிறாய்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்துள்ள நிகழ்ச்சி 'குக் வித் கோமாளி 2'. சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி இதுதான். இதில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின்.

ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் அஸ்வின். அவருடன் இணைந்து முக்கியக் கதாபாத்திரத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் நடிக்கவுள்ளார். நேற்று (ஜூன் 29) இதன் தலைப்பை வெளியிட்டுள்ளார் ஆர்யா.

ஹரிஹரன் இயக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'என்ன சொல்ல போகிறாய்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தல் குறைந்து வருவதால், விரைவில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது. சென்னையைச் சுற்றியே ஒட்டுமொத்தப் படத்தையும் படமாக்கி முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE