டிஜிட்டலில் அறிமுகமாகும் எஸ்.ஜே.சூர்யா

By செய்திப்பிரிவு

வெப் சீரிஸ் ஒன்றில் நாயகனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.

'பொம்மை', 'மாநாடு', 'டான்' உள்ளிட்ட பல படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இதில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொம்மை' திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. ஜூலை மாதத்தில் ட்ரெய்லர் வெளியாகும் என்று எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து புதிதாக வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா. க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப் படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கவுள்ளார். இவர் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் வெளியான 'கொலைகாரன்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பைத் தொடங்க ஆயத்தமாகி வருகிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்