மீண்டும் இணைகிறது அறிவழகன் - அருண் விஜய் கூட்டணி

By செய்திப்பிரிவு

அறிவழகன் இயக்கவுள்ள வெப் சீரிஸில் நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகவுள்ளது.

முதலில் ஓடிடி வெளியீடாக இருந்த இந்தப் படம் தற்போது ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'பார்டர்' படத்தைத் தொடர்ந்து, ஏவிஎம் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் வெப் சீரிஸ் ஒன்றை இயக்கவுள்ளார் அறிவழகன். இதற்கான பணிகளைத் தான் மும்முரமாகக் கவனித்து வருகிறார். இதில் நாயகனாக நடிப்பதற்கு பல்வேறு நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இறுதியாக, இந்த வெப் சீரிஸிலும் அருண் விஜய்யே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதன் பேச்சுவார்த்தை அனைத்துமே முடிவுற்றுவிட்டது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிகிறது.

ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்கும் இந்த வெப் சீரிஸ், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்