'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது தொடர்பாகப் படக்குழு ஆலோசனையைத் தொடங்கியுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்தது.
தற்போது அந்தக் காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் பயணிக்கவுள்ளது படக்குழு. கரோனா அச்சுறுத்தலால் அதனை இந்தியாவிலேயே படமாக்கலாமா என்று ஆலோசித்து வருகிறார்கள்.
மேலும், ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் தொடர்பாக அஜித் ரசிகர்கள் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏனென்றால், படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளபோதும், கரோனா அச்சுறுத்தலால் படம் தொடர்பான எந்தவொரு தகவலையும் படக்குழு வெளியிடவில்லை.
அரசியல்வாதிகளிடம் கேள்வி, கிரிக்கெட் போட்டியில் பதாகைகள் எனப் பல்வேறு வழிகளில் ரசிகர்கள் தங்களுடைய கடும் ஆட்சேபனையைத் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது தொடர்பாக படக்குழு மீண்டும் ஆலோசனையைத் தொடங்கியுள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனத் தெரிகிறது. 'வலிமை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் வெளியிடலாமா என்றும் படக்குழு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. அதனாலேயே, ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டில் தாமதம் எனக் கூறப்படுகிறது.
இந்தத் தகவலால் அஜித் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் 'வலிமை' தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago