வெற்றிமாறன் கதை திரைக்கதையில் லாரன்ஸ் நடிக்கும் ‘அதிகாரம்’

By செய்திப்பிரிவு

இயக்குநர் வெற்றிமாறன் கதை திரைக்கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘அதிகாரம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘பொல்லாதவன்’,‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்துக்கு வெற்றிமாறன் கதை திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார். ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிசட்டை’,‘கொடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை. செந்தில்குமார் இப்படத்தை இயக்கவுள்ளார்.

அகில இந்திய அளவில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே லாரன்ஸ் இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், S.கதிரேசன் இயக்கத்தில் ‘ருத்ரன்’ நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படபிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் மலேசியா மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

மேலும்