‘விக்ரம் வேதா’ நடிகர் பட்டியலில் கன்னட நடிகர் ராஜ்குமாரின் படம்: சர்ச்சைக்குப் பிறகு மாற்றிய கூகுள்

By செய்திப்பிரிவு

‘விக்ரம் வேதா’ நடிகர் பட்டியலில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் படம் இடம்பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ‘ஆஃபாயில்’ என்ற கதாபாத்திரத்தில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படம் மூலம் பிரபலமான நடிகர் ராஜ்குமார் நடித்திருந்தார்.

ஆனால், கூகுளில் இடம்பெற்றுள்ள ‘விக்ரம் வேதா’ படத்தின் நடிகர் பட்டியலில் ‘ஆஃபாயில்’ பாத்திரத்தில் நடித்ததாக மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் படம் இடம்பெற்றிருந்தது. இது கன்னட ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உலகின் முன்னணி தேடுதல் தளமான கூகுளில் இப்படி தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் கடுமையான் விமர்சனங்களை முன்வைத்தனர்.

கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது ராஜ்குமாரின் படத்தை கூகுள் மாற்றியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு உலகின் மிகவும் அருவருப்பான மொழி என்று தேடினால் கன்னட மொழியைக் காட்டி கன்னட மக்களின் கடும் எதிர்ப்பை கூகுள் நிறுவனம் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

38 mins ago

சினிமா

59 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

20 hours ago

மேலும்