‘ராக்’ ஜான்சனுடன் சண்டையா? - வின் டீசல் விளக்கம்

By செய்திப்பிரிவு

ஹாலிவுட்டின் வெற்றிப் படங்களில் ஒன்றான ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ எட்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் நடிகர் ராக் ஜான்சன் மற்றும் வின் டீசல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுவதுண்டு. 2016ஆம் ஆண்டு அப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து கொண்டிருந்த போது ராக் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் ‘செட்டில் இருக்கும் சிலர் அவர்கள் மட்டுமே நேர்மையாளர்கள் போலவும், மற்றவர்கள் அப்படி இல்லை என்பது போலவும் நடந்து கொள்கின்றனர். அடுத்த மாதம் படம் வெளியாகும்போது பாருங்கள். அதில் நான் பல காட்சிகளில் நடிக்காமல் கடும் கோபத்தில் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்’ என்று கூறியிருந்தார். இந்த பதிவு அப்போது கடும் வைரலானது. பின்னர் சில மணி நேரங்களில் அப்பதிவை ராக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கி விட்டார். அதன் பிறகு இப்போது இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு மாத இதழுக்கு நடிகர் வின் டீசல் பேட்டியளித்த போது அவரிடம் இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியிருப்பதாவது:

ஹாப்ஸ் கதாபாத்திரம் மிகவும் கடினமானது. அந்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை பெற நான் மிகவும் கடுமையாக நடந்து கொள்ளவேண்டியிருந்தது. ஒரு தயாரிப்பாளராக அந்த கதாபாத்திரத்துக்கு ஜான்சனை தேர்வு செய்யலாம் என்று நான் தான் சொன்னேன். காரணம் அவர் மல்யுத்த போட்டிகளில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். மேலும் பார்வையாளர்களுக்கு மிகவும் புதியதாக இருக்கும் வகையில் இந்த பாத்திரத்தை வடிவமைக்கலாம் என்று நான் கூறினேன். அதற்காக நான் மிகவும் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியிருந்தது. அதை நான் வேண்டுமென்றே செய்யவில்லை. நான் தயாரிக்கும் ஒரு படத்தில் உள்ள ஒரு கதாபாத்திரத்துக்கான நடிப்பை பெற நான் எதையும் செய்வேன்.

இவ்வாறு வின் டீசல் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

52 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

மேலும்