விஜய்க்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விதத்தில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மாளவிகா மோகனன் இருவரும் கவனம் ஈர்த்துள்ளனர்.
நேற்று (ஜூன் 22) விஜய் தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்குத் தங்களுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்தார்கள். மேலும், ரசிகர்களும் ஹேஷ்டேகுகள், புகைப்படங்கள் என ட்ரெண்ட் செய்து, கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
விஜய்க்கான பிறந்த நாள் வாழ்த்துப் பகிர்வில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மாளவிகா மோகனன் இருவரது பகிர்வுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, விஜய் பிறந்த நாளன்று அவருடைய புகைப்படம் ஒன்றை வரைந்து கவனம் ஈர்த்தார் கீர்த்தி சுரேஷ். கடந்த ஆண்டு வயலினில் 'குட்டி ஸ்டோரி' பாடலை வாசித்து வீடியோவாக வெளியிட்டார்.
அதேபோல், இந்த ஆண்டு 'ஆல்தோட்ட பூபதி' பாடலுக்கு விஜய்யின் பிரபலமான நடன அசைவுகள் அனைத்தையும் வைத்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதில் கீர்த்தியுடன் பவன் அலெக்ஸ் என்ற நடன இயக்குநரும் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ பதிவு இன்ஸ்டாகிராமில் பெரும் வைரலானது.
» தொடரும் ரசிகர்களின் செயல்: 'வலிமை' படக்குழுவினர் அதிர்ச்சி
» புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய கமல்
மேலும், 'மாஸ்டர்' கெட்டப்பில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இந்த வீடியோவும் வைரலானது.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago