'ஜகமே தந்திரம்' படத்துக்கு வந்திருக்கும் விமர்சனங்களுக்கு, படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ஜகமே தந்திரம்' வெளியானது. கடந்த வருடம் மே மாதமே இந்தப் படம் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா நெருக்கடி காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், வெளியாக சரியான தேதி கிடைக்காமல் தள்ளி வைக்கப்பட்டு, கடைசியில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது.
படத்துக்குப் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே வந்துள்ளன. தனுஷின் நடிப்புக்குப் பாராட்டுகள் கிடைத்திருந்தாலும் திரைக்கதை கடும் விமர்சனத்துக்குள்ளானது. இது தவிர சமூக வலைதளங்களில் படத்தில் இருக்கும் லாஜிக் பிழைகளையும் பல ரசிகர்கள் புகைப்படத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
படத்துக்கு வந்திருக்கும் விமர்சனங்கள் குறித்து இதுவரை படத்துக்கு சம்பந்தப்பட்ட யாரும் பேசவில்லை. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் 'ஜகமே தந்திரம்' படத்தின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
இதில், "வெற்றி பெறுவது மட்டும் வெற்றியல்ல, தோல்வி முகம் மட்டும் தோல்வியல்ல, தொடர்ந்து உங்கள் பாதையில் சென்றுகொண்டே இருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 'ஜகமே தந்திரம்' படத்துக்கு வந்திருக்கும் எதிர்மறை விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் பொருட்டே சஷிகாந்த் இதைப் பகிர்ந்திருக்கிறார் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக சஷிகாந்த் தயாரிப்பில் 'ஏலே' திரைப்படமும் முதலில் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியானது. பின்னர் ஓடிடி தளத்தில் வெளியானது.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago