பிரபல நடிகர் ஹம்சவர்தனின் மனைவி காலமானார்

By செய்திப்பிரிவு

பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் மருமகளும், நடிகர் ஹம்சவர்தனின் மனைவியுமான சாந்தி ஹம்சவர்தன் (42) நேற்று மாலை காலமானார்.

காதலிக்க நேரமில்லை, நான், ஊமை விழிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் ஹம்சவர்தன், 'மானசீக காதல்', 'வடுகபட்டி மாப்பிள்ளை', 'புன்னகை தேசம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். மம்மூட்டியுடன் 'ஜூனியர் சீனியர்' படத்தில் இணைந்து நடித்தார்.

இவரது மனைவி சாந்தி. இவர் ரேஷ்மா என்ற பெயரில் மு.களஞ்சியம் இயக்கிய ‘பூமணி’ படத்தில் இரண்டாவது நாயகியாகவும், நடிகர் கார்த்திக் உடன் ‘கிழக்கு முகம்’ என்கிற படத்தில் நாயகியாகவும் நடித்தார். மேலும், சில படங்களில் நடித்துள்ளார் .

ஹம்சவர்தன் - சாந்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். கடந்த மாதம் சாந்திக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கரோனா நெகட்டிவ் ஆனபிறகும் சாந்திக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்க்கு சாந்தியின் உடல் கொண்டு வரப்பட்டு இன்று மதியம் 2:30மணிக்கு பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

25 mins ago

சினிமா

37 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்