ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் ஒரு படத்தில் லாரன்ஸின் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகமாகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குநராகவும் இருப்பவர் ராகவா லாரன்ஸ். ‘முனி’, ‘காஞ்சனா’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி நடித்துள்ளார். லாரன்ஸின் இளைய சகோதரர் எல்வின். இவர் ‘காஞ்சனா 2’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் அறிமுகமானார். கடந்த ஆண்டு தனது தம்பியின் நடிப்பில் ஒரு படத்தைத் தயாரிக்க உள்ளதாக லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். ஆனால், கரோனா அச்சுறுத்தலால் அப்படம் தாமதமானது.
இந்நிலையில் தற்போது ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டில்லி பாபு தயாரிக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க எல்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று (21.06.21) எல்வினின் பிறந்த நாளை முன்னிட்டு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் எல்வினுடன் ராஜ்கிரண் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரைத் தவிர மற்றொரு முன்னணி நடிகர் ஒருவரும் இப்படத்தில் நடிக்கிறார். மற்ற நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
» திரையரங்க வெளியீட்டுக்காக நான் வைத்திருந்த படம் 'மாலிக்' - ஃபகத் பாசில் வருத்தம்
» விபத்தில் குறைந்த காயங்களோடு தப்பியது என் அதிர்ஷ்டமே: ஃபஹத் ஃபாசில் பகிர்வு
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
சினிமா
32 mins ago
சினிமா
43 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago