தேசிய விருது வென்ற இயக்குநரான சேகர் கம்முலா இயக்த்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தேசிய விருது வென்ற இயக்குநரான சேகர் கம்முலா இயக்த்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் ஒரு படத்தில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கில் ‘டாலர் ட்ரீம்ஸ்’, ‘ஃபிடா’, ‘லீடர்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சேகர் கம்முலா. முதல் படத்திலேயே சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர். தற்போது சேகர் கம்முலா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் ஒரு இயக்கவுள்ளார்.
» ‘ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன்’ - கார்த்திக் சுப்புராஜுக்கு தனுஷ் புகழாரம்
» ‘சூப்பர்டா தம்பி!’- தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள்
பிரம்மாண்ட பொருட்செலவில் நாராயணதாஸ் நரங் மற்றும் புஷ்கர் ராம்மோகன் ராவ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தில் பணிபுரியும் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிடும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தற்போது ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தி க்ரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தி க்ரே மேன்’ படப்பிடிப்பு முடிந்த பின்னர் சேகர் கம்முலா படத்துக்கான தேதிதளை தனுஷ் ஒதுக்குவார் என்று தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago